தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு + "||" + 6,61,715 COVID19 tests conducted in India in the last 24 hours: Ministry of Health and Family Welfare

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கம் ஆகிவிடும் என்பது சுகாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

தடுப்பூசிகள் இல்லாததால், தற்போது பரவலைக் கட்டுப்படுத்த சோதனை, சிகிச்சை, தொடர்புகளை கண்டறிதல் ஆகியவையே முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இதன்படி, இந்தியாவிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,61,715 மாதிரிகள் பரிசோதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக மேலும் 54,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
2. ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - லண்டன் விமான நிலையத்தில் தொடக்கம்
தற்போது ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 67.33 லட்சமாக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் 26 லட்சம் வரை அதிகரிக்க கூடும் நிபுணர் குழு எச்சரிக்கை
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர் என்று நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.