தேசிய செய்திகள்

இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு + "||" + Ghaziabad suitcase case: Woman who was wrongly declared dead found alive after 5 days

இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு

இறந்ததாக தவறாக அறிவிக்கப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இறந்த நிலையில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கொண்டனர். இதனையடுத்து அலிகரைச் சேர்ந்த தாய் ஒருவர், இது காணாமல் போன தனது மகள் 25 வயது வாரிஷா என்று அடையாளம் காட்டினார். மேலும், தனது மகளை அவளது மாமியாரும் கணவரும் தான் கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில், கணவரும் மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையை கண்டுபிடித்தத்தற்காக காசியாபாத் போலீசார் குழுவிற்கு 15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.


இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்துள்ளது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் வாரிஷா தானே அலிகார் பஸ் ஸ்டாண்டில் ஒரு லேடி கான்ஸ்டபிளை அணுகி, கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறினார், அதன் பிறகு அவர் தனது கணவரை விட்டு விட்டு நொய்டாவுக்குச் சென்றார். அவள் ஒரு தொழிற்சாலையில் தங்கியிருந்து தினசரி கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்தார். தான் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது தனது பெற்றோரிடம் நான் உயிரோடு  இருக்கிறேன் என கூறவந்தாக தெரிவித்துள்ளார்.

அவரைக் கொடுமைப்படுத்தியதற்காக கணவரும் மாமியாரும் சிறையில் உள்ளனர். இப்போது வரை சூட்கேஸில் இருந்த பெண் யார் என்பது காசியாபாத் போலீசாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தவறான உடலை காட்டியதற்காக வாரிஷாவின் தாய் மற்றும் சகோதரர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.