தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை + "||" + Sushant Singh Rajput Case: Bihar Government Recommends CBI Probe

சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை

சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை
சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.
பாட்னா,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரிக்க  மும்பை வந்துள்ள பாட்னா போலீசாருக்கு மும்பை போலீஸ் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பீகார் அரசியல் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக காங்.தலைவருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை- சித்தராமையா கடும் கண்டனம்
கர்நாடக காங்.தலைவர் டிகே சிவக்குமாருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
2. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி தந்தையிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்தினர்.
4. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 10½ மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
5. சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தீவிரம்
தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.