கொரோனா அச்சுறுத்தல்: தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட திரிபுரா முதல் மந்திரி


கொரோனா அச்சுறுத்தல்: தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட திரிபுரா முதல் மந்திரி
x
தினத்தந்தி 4 Aug 2020 7:29 AM GMT (Updated: 4 Aug 2020 7:29 AM GMT)

குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திரிபுரா முதல் மந்திரி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிப்லாப் குமார் தேவ், கொரோன பரிசோதனையும் மேற்கொண்டுள்ளார். பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிப்லாப்   குமார் தேப்," எனது குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம்.  எனக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 

ஏனைய அனைவருக்கும் நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட எனது குடும்பத்தினர் விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story