தேசிய செய்திகள்

அயோத்தியில் உள்ள ஹனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு + "||" + PM Modi reaches Lucknow, takes chopper to fly to Ayodhya

அயோத்தியில் உள்ள ஹனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

அயோத்தியில் உள்ள ஹனுமன்  கோவிலில் பிரதமர் மோடி  வழிபாடு
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார்.  கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழாவிற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் உள்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

அயோத்தி வந்த பிரதமர் மோடியை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். சகேத் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் மூலமாக வந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம், விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார்.

ராம ஜென்ம பூமி செல்வதற்கு முன்பாக, அயோத்தியில் உள்ள மிகப்பெரிய ஹனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 23 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
2. பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாம் செய்த அதிர்ஷ்டம் - நடிகை கங்கனா ரனாவத்
மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாட்டுமக்கள் செய்த அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...