பல வருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி


பல வருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Aug 2020 8:15 AM GMT (Updated: 5 Aug 2020 8:15 AM GMT)

சராயு நதிக்கரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று பிரதமர் பேசினார்.

அயோத்தி,

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்
*ராமர் மற்றும் சீதா தேவியை வணங்கி பேச்சை தொடங்குவதாக பிரதமர் பேச்சு
*நாட்டு மக்களுக்கும் உலக முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

*உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.
*என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
*சராயு நதிக்கரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
*பல வருட காத்திருப்புக்கு இன்றைய தினம் முடிவு கிடைத்துள்ளது.

*இந்த தருணம் நடந்து முடிந்ததை கோடிக்கணக்கான இந்தியர்களால் இன்னமும் நம்ப முடியவில்லை.
*ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது.
*ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

*சுதந்திரம் போராட்டம் போன்று ராமர் கோவில் கட்டவும் பலர் போராடியுள்ளனர்.
*ராமர் கோவில் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
*ராமர் கோவிலுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி.

Next Story