“ராமர் என்றால் அன்பு” - ராமர் கோவில் அடிக்கல் குறித்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு


“ராமர் என்றால் அன்பு” - ராமர் கோவில் அடிக்கல் குறித்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 5 Aug 2020 12:08 PM GMT (Updated: 5 Aug 2020 12:08 PM GMT)

ராமர் என்றால் அன்பு என்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் ராமர் என்றால் அன்பு என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில், “ மரியாதைக்குரிய புருஷோத்தமரான கடவுள் ராமர் மனித மாண்புக்கு மிகப் பெரிய உதாரணமாக திகழ்பவர். ராமரின் மனிதத்தன்மை நம் அனைவரது இதயத்திலும் எப்போதும் இருக்கும். ராமர் என்றால் அன்பு. அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது. ராமர் என்றால் சிந்தனை, ராமர் என்றால் நீதி” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Next Story