இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Aug 2020 9:05 AM GMT (Updated: 6 Aug 2020 9:05 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 537 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 19 லட்சம் என்ற அளவை கடந்தது.  அதற்கு 2 நாட்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அந்த நாளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,509 ஆக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

எனினும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக இருந்தது.  குணமடைந்தோர் விகிதம் 67.19 சதவீதம் ஆக உயர்ந்திருந்தது.  உயிரிழப்பு விகிதம் 2.09 சதவீதம் ஆக இருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இன்றைய தகவலின்படி, குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் ஆனது 67.6 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் ஒவ்வொரு நாளும் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story