தேசிய செய்திகள்

காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு + "||" + Abducted Territorial Army soldier Shakir Manzoor’s clothes recovered from Shopian village

காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு

காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு
காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் ஷோபியானின் ரெஷிபோரா கிராமத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் பயங்கரவாதிகளால்  ஆகஸ்ட் 2 ஆம் தேதி கடத்தப்பட்டார். அதே நேரத்தில், எரிக்கப்பட்ட நிலையில் அவரது கார் குல்காம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடைகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன வீரரின் உடைகள் அவரது வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில்  உள்ள மற்றொரு கிராமமான லாண்டூராவில் ஒரு பழத்தோட்டத்திற்கு அருகில் மூன்று வெவ்வேறு இடங்களில் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன வீரரின் குடும்பத்தினர் துணிகள் ஷாகிருக்கு  சொந்தமானவைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட நாளில் அவற்றை அணிந்திருந்ததாகவும் கூறி உள்ளனர்.

இதற்கிடையில், கடத்தப்பட்ட வீரரின் தந்தை மன்சூர் அகமது, ஷாகிர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால், அவரது இறுதி சடங்கிற்காக பயங்கரவாதிகள் அவரது உடலை திருப்பித் தர வேண்டும் என்றும், அவர் உயிருடன் இருந்தால், அவர்கள் அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்
காங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.
2. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200-முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
5. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.