கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன் - அமித்ஷா


கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன் - அமித்ஷா
x
தினத்தந்தி 7 Aug 2020 4:27 PM GMT (Updated: 7 Aug 2020 4:27 PM GMT)

கேரளாவில் விமான விபத்து செய்தி அறிந்து மன வருத்தம் அடைந்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்தது,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தரையிறங்கும் போது ஓடுபாதை வழுக்கியதால் விமானம் நிற்காமல் சென்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
.
விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள், 2 விமானிகள், 4 ஊழியர்கள் இருந்தனர்.  விபத்துக்குள்ளான விமானத்தில் விமானிகள், பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணித்துள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட காவல்துறையினருக்கும் உத்தரவு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

சதித்திட்டம் ஏதும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட விமான நிலைய பகுதியில் மழை பெய்வதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டர் பதிவில்,

கேரளாவில் விமான விபத்து செய்தி அறிந்து மன வருத்தம் அடைந்தேன்.கோழிக்கோட்டில் விமான விபத்து நடந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை விரைந்து செல்லவும், மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story