தேசிய செய்திகள்

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு + "||" + Casualties Feared After Kerala Plane Splits In Two, 191 On Board

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பைலட் உள்பட 4 பேர் பலியானார்கள் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
கோழிக்கோடு

துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம்  கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது.

விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இந்த விபத்தில் விமானிகள் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.இறந்த விமானி கமாண்டர் கேப்டன் தீபக் சாத்தே என அடையாளம் காணப்பட்டுள்ளார் 

விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விமானத்தில் தீ பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 10 குழந்தைகள் உள்பட 174 பயணிகள்,  விமான பைலட்டுகள் 4 விமான ஊழியர்கள் இருந்தனர்.

விமான நிலையத்தில் 0483-2719493 என்ற எண்ணில் அவசர கட்டுப்பாட்டு அறை இயங்கத் தொடங்கியுள்ளது. ...


தொடர்புடைய செய்திகள்

1. கேரள விமான விபத்து; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உதவி எண் அறிவிப்பு
கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
2. கேரள விமான விபத்து:மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - அமைச்சர் கே.கே. சைலஜா
கேரள விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.
3. கேரள விமான விபத்து: தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்
கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளால் விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
5. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி
கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.