தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல் + "||" + Kozhikode’s tabletop runway risky for landing, officials warned 10 years ago

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்
டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம்
கோழிக்கோடு, 

கேரளாவில் நேற்று முன்தினம் விமான விபத்து நடந்த கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மழைக்காலங்களில் விமானங்கள் தரையிறங்க பாதுகாப்பற்றது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு கமிட்டி கூறியுள்ளது.

இது குறித்து கமிட்டியின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு அதைப்போன்ற ஓடுதள அமைப்பு கொண்ட கோழிக்கோடு விமான நிலையமும், மழைக்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு பாதுகாப்பில்லாதது என்று ஏற்கனவே எச்சரித்திருந்தேன். விமானங்கள் ஓடி வந்து தரை இறங்குவதற்கான அதிகபட்ச ஓடுதளத்தை(ரன்வே) விட பாதுகாப்புக்காக கூடுதலாக 240 மீட்டர் நீளத்துக்கு ஓடுதளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் 240 மீட்டர் நீளத்துக்கு பதில் 90 மீட்டர் நீளத்துக்குத் தான் ஓடுதளம் உள்ளது’ என்று கூறினார்.

இதுபோன்ற டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம் என்று கூறிய மோகன் ரங்கநாதன், இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டே சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஆலோசனை கழக தலைவருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழை: சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
2. நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக பாலமோரில் 46.6 மி.மீ. மழை பதிவானது.
4. ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின.
5. அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.

ஆசிரியரின் தேர்வுகள்...