ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 8 Aug 2020 9:10 PM GMT (Updated: 8 Aug 2020 9:10 PM GMT)

வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அப்போது ‘பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின்’ கீழ் 6-வது தவணையாக 8½ கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைப்பார்.

மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story