தேசிய செய்திகள்

தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Telangana minister, wife confirm corona exposure

தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநில தொழில்துறை மந்திரியாக இருப்பவர் மல்லா ரெட்டி. அவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மந்திரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘நான் நலமாக உள்ளேன். எனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. உடலநலக்கோளாறும் இல்லை. இருப்பினும் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். கவலைப்படக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.
2. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது
புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
4. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.
5. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...