தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா + "||" + Union Home Minister Amit Shah has been spared the corona impact

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் பாதிப்பு உறுதியானது.  கடந்த ஒரு வாரம் வரை அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

மத்திய மந்திரி அமித்ஷா மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் ஆவார்.  எனினும், தொடர்ந்து தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி நடந்த பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியானது.  இதுபற்றிய தகவலை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது
புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
2. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.