தேசிய செய்திகள்

நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + From tomorrow Chance of rain again in Mumbai for a week Meteorological Center Information

நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,

மும்பையில் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்களாக பெய்த கனமழையால் நகர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதையடுத்து வியாழக்கிழமை முதல் மழை குறைந்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நாளை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலிகர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் முதல் மீண்டும் தீவிரமடைய உள்ளது. இதனால் மும்பை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஒரு வார காலத்துக்கு நீடிக்கலாம்” என்றார்.

ஆண்டுதோறும் மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் 58.52 செ.மீ. மழை தான் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது. அதாவது கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மும்பையில் 59.76 செ.மீ. மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
நாளை முதல் (அக்., 23) பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்து உள்ளது.
2. நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது
நாளை (திங்கட்கிழமை) முதல் ரெயில்கள் இயங்குவதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முன்பதிவு தொடங்கியது.
3. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்
நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.
4. வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக அழைத்து வரலாம்: தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் அனுமதி
வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக தமிழகத்துக்கு அழைத்து வரலாம் என்று தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
5. நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு
நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார்