மராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்


மராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2020 5:54 AM GMT (Updated: 10 Aug 2020 5:54 AM GMT)

மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

நவிமும்பை,

இந்தியாவுக்குள் வெளிநாட்டில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து மராட்டியத்தின் கொங்கன் பிரிவுக்கு உட்பட்ட நவிமும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பைப்புகளின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டு 191 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.  இதன் மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.  அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story