குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு


குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2020 12:13 PM GMT (Updated: 10 Aug 2020 12:13 PM GMT)

குஜராத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ,1,000- ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத்,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று வைரசுக்கு தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. தற்போது, தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரவில்லை  என்பதால், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்தில் முதலில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநிலத்தில் முகக்வசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதமானது ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து இது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.500 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறை நாளை(ஆகஸ்ட் 11) முதல் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலைக் குறைக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story