பாஜகவின் ஜனநாயக விரோத முகத்தில் விழுந்த அடி: சச்சின் பைலட் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து


பாஜகவின்  ஜனநாயக விரோத  முகத்தில் விழுந்த அடி:  சச்சின் பைலட் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 10 Aug 2020 7:17 PM GMT (Updated: 10 Aug 2020 7:17 PM GMT)

ராஜஸ்தான அரசியலில் குழப்பம் முடிவுக்கு வர உள்ள நிலையில் இது ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக அதிருப்தியில் இருந்த சச்சின் பைலட், மீண்டும்  காங்கிரஸ் முகாமிற்கு திரும்பியுள்ளார். இதனால், ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல்  நெருக்கடி முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது. 

ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,  “சச்சின் பைலட்டும் (ராகுல்காந்தியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்) மகிழ்ச்சியடைந்துள்ளார். எங்கள் முதல்மந்திரியும் மகிழ்ச்சியடைந்துள்ளார். 

இது ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி.  குதிரை பேரத்தில் ஈடுபடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நாசமாக்குவதும் அவர்கள்(பாஜக) தான். பாஜக செய்துவரும் தவறான செயல்களுக்கு இது ஒரு செய்தியாகும்” என்றார். 


Next Story