தேசிய செய்திகள்

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை தடை + "||" + The suspension of flights to Kolkata from 6 cities including Chennai will continue till 31st August: West Bengal Government

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை தடை

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை தடை
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்து உள்ளது.
கொல்கத்தா,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  எனினும், குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து வருகிறது என அரசு ஆறுதல் தெரிவித்து உள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.

இதேபோன்று மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களிலும், தமிழகத்தின் சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காள அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ள நகரங்களில் இருந்து (டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் ஆமதாபாத்) கொல்கத்தாவுக்கு விமானங்கள் வருவதற்கான தடை வரும் 31ந்தேதி வரை தொடரும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன் கடந்த ஜூலை 17ந்தேதி இதேபோன்று தடை விதித்து மேற்கு வங்காள அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.  அதன்பின்னர் கடந்த ஜூலை 30ந்தேதி விமானங்களின் வருகைக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: கையறு நிலையில் கைவினை கலைஞர்கள்!
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் கையறு நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: பிதற்றல் ஒலியாக முடிந்த ராஜ்நாத்சிங் அறிவிப்பு - ப.சிதம்பரம் விமர்சனம்
ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை குறித்த ராஜ்நாத்சிங் அறிவிப்பை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
3. தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
4. நாளை ஆடி அமாவாசை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
ஆடி அமாவாசை தினம் நாளை அனுசரிக்கும் நிலையில் ஊரடங்கினால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.
5. கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...