இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Aug 2020 5:13 AM GMT (Updated: 11 Aug 2020 5:13 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக உயர்வடைந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் நேற்று வரை கொரோனா பாதிப்புகள் பற்றிய மொத்த பரிசோதனை 2,52,81,848 ஆக உள்ளது.  இவற்றில் நேற்று ஒரு நாளில் 6,98,290 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கான நல மையங்கள், தனி வார்டுகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு தரப்பினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது தவிர்த்து லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் உயர்வடைந்து உள்ளது என்ற ஆறுதல் செய்தி வெளிவந்துள்ளது.  இதுபற்றி மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்காக 28.21% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று உயிரிழப்பு விகிதம் 1.99% ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story