இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2020 4:28 AM GMT (Updated: 12 Aug 2020 4:28 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 834 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். 

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  23,29,639 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன்  6,43,948 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து 16,39,600- பேர் இதுவரை மீண்டுள்ளனர்.  தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46,091 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை    2,60,15,297- சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 7,33,449- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Next Story