தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு + "||" + pettimudi death toll rises 53

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53  ஆக உயர்வு
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.
மூணாறு, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும்  ஒருவரின்  உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 53- ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல்
இன்றைய ஐ.எஸ்.எல். கால்பந்து ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.
2. கேரளாவில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு
கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூனில் இருந்து ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 36 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
5. காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா வைரஸ்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை
கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.