சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்


சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2020 8:29 AM GMT (Updated: 12 Aug 2020 8:29 AM GMT)

சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

 சுதந்திர தின விழா வரும்  15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அரசு  உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தலைநகரிலும் மற்ற மாநிலங்களிலும் இந்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு வந்த வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சுதந்திர தினத்தன்று காலை 7.21 மணிக்கு பிரதமர் மோடி செங்கோட்டை மைதானத்திற்கு வருகை தருவார்.  7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஒத்திகையை தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்றொரு பெரிய மாற்றமாக இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க மாட்டார்கள். 500 என்.சி.சி மாணவர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். 


Next Story