ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு தொற்று: இந்தியாவில் பாதிப்பு 23 லட்சத்தை கடந்தது


ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு தொற்று: இந்தியாவில் பாதிப்பு 23 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 12 Aug 2020 11:30 PM GMT (Updated: 12 Aug 2020 8:27 PM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 23 லட்சத்தை கடந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 4 நாட்களாக தொடர்ந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்தது.

திடீரென நேற்று முன்தினம் பாதிப்பு குறைந்தது. 53 ஆயிரத்து 601 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்து 963 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நமது நாட்டில் தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் உலகில் கொரோனா பாதிப்பில் மோசமான மூன்றாவது நாடாக இந்தியா தொடர்கிறது. உலகளவில் மோசமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு 51 லட்சத்து 41 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 64 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் தொற்றுக்கு இரையாகியும் உள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் இருக்கிறது. அங்கு 30 லட்சத்து 57 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியும் உள்ளனர்.

இதே போன்று ரஷியா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 834 பேர் பலியாகி உள்ளனர். முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் (871) நேற்று பலி சற்றே குறைந்துள்ளது.

834 பேரில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் 256 பேர் ஆவர். அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.

ஆந்திராவில் 87 பேரும், கர்நாடகத்தில் 86 பேரும், உத்தரபிரதேசத்தில் 56 பேரும், மேற்கு வங்காளத்தில் 49 பேரும், பஞ்சாப்பில் 32 பேரும், குஜராத்தில் 23 பேரும், மத்திய பிரதேசத்தில் 18 பேரும், பீகாரில் 16 பேரும், ஜம்மு காஷ்மீரில் 12 பேரும், அரியானாவிலும், ராஜஸ்தானிலும் தலா 11 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

ஒடிசாவில் 10, தெலுங்கானாவில் 9, டெல்லியில் 8, கோவாவில் 6, சத்தீஷ்கார், கேரளாவில் தலா 5, அசாம், ஜார்கண்டில் தலா 4, அந்தமான் நிகோபார், சண்டிகார், இமாசலபிரதேசம், மணிப்பூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை என்பது 46 ஆயிரத்து 91 ஆக உள்ளது. மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் (18 ஆயிரத்து 306) உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும் (5,159), மூன்றாம் இடத்தில் டெல்லியும் (4,139) உள்ளன.

கர்நாடகத்தில் 3,398, குஜராத்தில் 2,695, ஆந்திராவில் 2,203, உத்தரபிரதேசத்தில் 2,176, மேற்கு வங்காளத்தில் 2,149, மத்திய பிரதேசத்தில் 1,033 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் 811 பேர், தெலுங்கானாவில் 654 பேர், பஞ்சாப்பில் 636 பேர், அரியானாவில் 500 பேர், ஜம்மு காஷ்மீரில் 490 பேர், பீகாரில் 413 பேர், ஒடிசாவில் 296 பேர், ஜார்கண்டில் 192 பேர், அசாமில் 155 பேர், உத்தரகாண்டில் 136 பேர், கேரளாவில் 120 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.

சத்தீஷ்காரில் 104, புதுச்சேரியில் 91, கோவாவில் 86, திரிபுராவில் 43, சண்டிகாரில் 26, அந்தமான் நிகோபாரில் 21, இமாசலபிரதேசத்தில் 18, மணிப்பூரில் 12, லடாக்கில் 9, நாகலாந்தில் 8, மேகாலயாவில் 6, அருணாசலபிரதேசத்தில் 3, தத்ராநகர் ஹவேலி டாமன் தியுவில் 2, சிக்கிமில் ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களில் 70 சதவீதத்துக்கு மேலானோர், பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனாவும் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

Next Story