தேசிய செய்திகள்

மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு + "||" + Maharashtra govt slashes charges for Covid-19 tests by Rs 300

மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு

மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது. அதிக பரிசோதனையினால் மட்டுமே நோய் தொற்றை குறைக்க முடியும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. எனவே பரிசோதனை கட்டணத்தை குறைக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக குழு ஒன்றையும் அமைத்து ஆய்வு செய்தது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை கட்டண குறைப்பு விவரத்தை நேற்று மராட்டிய அரசு அறிவித்தது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது: 

கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.300 வரை குறைத்து உள்ளோம். எனவே இனி பரிசோதனை நடத்தும் ஆய்வங்கங்கள் ரூ.1,900 மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். வீட்டுக்கு வந்து சளிமாதிரி சேகரிப்பது உள்ளிட்ட நேரங்களில் கட்டணங்கள் வேறுபடும். இதுபோன்ற சம்பவங்களில் கட்டணம் ரூ.2,200 மற்றும் ரூ.2,500 பெறலாம்.பொதுமக்களின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.