இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ’ஸ்டெர்லைட் பவர்’ உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம்


இந்தியாவில்  தனியார் ரெயில்களை இயக்க ’ஸ்டெர்லைட் பவர்’ உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 13 Aug 2020 1:56 AM GMT (Updated: 13 Aug 2020 1:56 AM GMT)

இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ஸ்டெர்லைட் பவர் உள்பட23 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 12 நகரங்களில் இருந்து 109 வழித்தடங்களில் தனியார் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரெயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செயவதற்கான முதற்கட்ட விண்ணப்ப கூட்டம்  காணொலி மூலமாக நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், மேதா, ஸ்டெர்லைட் பவர், பாரத் போர்ஜ்,  எல்&டி உள்பட 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன. ரூ. 30 ஆயிரம் கோடியில் தனியார் முதலீட்டுடன் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.  ரெயில்களை இயக்குவதற்கு  தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய இரண்டு கட்டங்களாக ஏல நடவடிக்கை நடைபெறும். ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரெயில்களுடன் கூடுதல் ரெயிலாக இவை இயக்கப்படும். விரைவில் ஏல முறையில் நிறுவனங்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ள ரெயில்வே மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. 

தனியார் ரெயில்கள் இயக்குவது என்பது ரெயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இல்லை என்று  மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். தனியார் முலம் ரெயில்களை இயக்குவதன்  மூலம்  ரெயில் பயணிகளே அதிக பலன் அடைவர் எனவும் ரெயில்வே தெரிவித்துள்ளது. 

Next Story