இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்: ராகுல் காந்தி டுவிட்


இயற்கையை நாம் பாதுகாத்தால்தான்  இயற்கை நம்மை பாதுகாக்கும்: ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 13 Aug 2020 4:13 AM GMT (Updated: 13 Aug 2020 4:13 AM GMT)

இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். 

மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020- ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story