இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 Aug 2020 4:35 AM GMT (Updated: 13 Aug 2020 4:35 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. மராட்டியம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக காணப்படுகிறது. 

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இன்னும் பொது பயன்பாட்டுக்கு வராததால், தற்போதைக்கு  பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் மூலமே தொற்று பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சளி மாதிரி பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு  10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  66,999-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  23,96,638 -ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன்  6,53,622- பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  16,95,982- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

Next Story