தேசிய செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி + "||" + This platform has big reforms such as faceless assessment, faceless appeal, and taxpayers charter.

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி

நேர்மையாக  வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள்:  பிரதமர் மோடி
நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறினார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி  மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியதாவது:  நேர்மையாளர்களை பெருமை படுத்தும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும்.   நேர்மையாக  வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. வரி விதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

 கடைமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன.  நாட்டு மக்கள் வாழ்க்கையில் இருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய முயற்சி இதுவாகும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
2. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
3. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.
4. தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி
தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி
விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை நெருக்கடியை எதிர்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.