தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு + "||" + Abuse of recruitment of beneficiaries of the Prime Minister's Kisan Financial Assistance Scheme for Farmers

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை,

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் பதிவேடுகளின்படி நாடு முழுக்க 8.89 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,793 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் துறையின் பாஸ்வேர்டை திருடி விவசாயிகள் அல்லாத பல லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடலூரில் கிசான் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து விரிவான விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.