“சுதேசி என்றால் எல்லா அயல்நாட்டுத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விளக்கம்


“சுதேசி என்றால் எல்லா அயல்நாட்டுத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விளக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2020 7:26 AM GMT (Updated: 13 Aug 2020 7:26 AM GMT)

சுதேசி என்றால் எல்லா அயல்நாட்டுத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பதாக அர்த்தமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் புதுடெல்லியில் புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் தற்சார்பு கொள்கை மற்றும் சுதேசி இயக்கம் மூலம் இந்தியா தன்னிறைவு பெறுவது குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-

“சுதேசி என்ரால் எல்லா அயல்நாட்டுத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல. நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யலாம். ஆனால் அது நாம் விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அவை இருக்க வேண்டும். சுதேசி என்பது உள்நாட்டு பொருட்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகும்.

நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்து நம்நாட்டுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம். நம்முடைய தேவைக்கு ஏற்ப வெளிநாடுகளிலும், இந்த உலகில் சிறந்ததாக இருக்கும் அனைத்தையும் இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக்கொள்கை இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல சரியான அடியை எடுத்து வைத்துள்ளது. இதுபோன்ற கொள்கைகள் இந்திய மக்களின் திறன், திறமையையும், பாரம்பரிய அறிவையும் உணரவைக்கும்” என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Next Story