தேசிய செய்திகள்

ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு + "||" + Appeal against the release of A. Razza et al: 2G case should be heard soon - CBI in Delhi High Court Petition

ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு

ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு
ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி, 

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரை டெல்லி சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஐகோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி வருகிற நவம்பர் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக்கேட்டு நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி முன் நேற்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இந்த வழக்கில் நீதிபதி சேத்தி முன் கணிசமான காலம் வாதம் செய்யப்பட்டு உள்ளது. அவர் ஓய்வு பெறுமுன் இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்படவில்லை என்றால் கோர்ட்டு நேரம் வீணடிக்கப்பட்டதாகி விடும். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். மேலும் எதிர் மனுதாரர்களின் வாதத்தையும் விரைவில் முடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு நீதிபதி பம்பானி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி சேத்தி முன் நிலுவையில் இருப்பதால், இந்த மனுவும் அவருக்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினார். எனினும் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு உட்பட்டு இந்த விவகாரம் 17-ந்தேதி நீதிபதி சேத்தி முன் வைக்கப்பட வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்கா விடுதலை
உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்கா விடுதலை செய்யப்பட்டனர்.
2. ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: ஸ்டெர்லைட் நிறுவன வழக்கு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
ஸ்டெர்லைட் நிறுவன ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கில் நாளை விசாரணை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
3. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்? - புதிய தகவல்
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
4. ஈரான் டாக்டரை விடுதலை செய்தது, அமெரிக்கா- இரு நாடுகள் இடையே மீண்டும் உறவு துளிர்க்குமா?
ஈரான் டாக்டரை அமெரிக்கா விடுதலை செய்தது. இதன்மூலம் இரு நாடுகள் இடையே மீண்டும் உறவு துளிர்க்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5. அமெரிக்க கைதி விடுதலை; ஈரானுக்கு டிரம்ப் நன்றி: இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்பு என தகவல்
அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்தது. இதற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு எனவும் கருத்து கூறினார்.