கா‌‌ஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இறந்தவர்கள் அப்பாவி இளைஞர்களா? உறவினர்கள் புகாரால் பரபரப்பு


கா‌‌ஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இறந்தவர்கள் அப்பாவி இளைஞர்களா? உறவினர்கள் புகாரால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 1:00 AM GMT (Updated: 14 Aug 2020 1:02 AM GMT)

கா‌‌ஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர், 

கா‌‌ஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே கொல்லப்பட்ட 3 பேரும் பயங்கரவாதிகள் அல்ல என்றும், அவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்றும் அவர்களது உறவினர்கள் தற்போது பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.

இறந்தவர்கள் ரஜோரி பகுதியை சேர்ந்த அப்ரார் அகமது கான் (வயது 18), இம்தியாஸ் உசேன் (26) மற்றும் அப்ரார் அகமது (21) என்றும், அவர்கள் கடந்த 16-ந்தேதி குல்காம் சென்றதாகவும், பின்னர் மாயமாகி விட்டதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் உண்மையிலேயே அப்பாவி இளைஞர்களா? அல்லது பயங்கரவாதிகளா? என உறவினர்களிடம் எடுக்கப்படவுள்ள டி.என்.ஏ. சோதனை முடிவில் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


Next Story