தேசிய செய்திகள்

காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்ட நாள் பிரதமர் - மோடி புதிய சாதனை + "||" + Long-time PM of non-Congress party - Prime Minister Modi's new record

காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்ட நாள் பிரதமர் - மோடி புதிய சாதனை

காங்கிரஸ் சாராத கட்சியின் நீண்ட நாள் பிரதமர் - மோடி புதிய சாதனை
சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்.
புதுடெல்லி,
 
சுதந்திர இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்று, கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ந் தேதி பதவியேற்றார். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியை ஏற்றார்.


இதில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேரு கடந்த 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27 வரை 6,130 நாட்கள் அதாவது 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும், பின்னர் 1980 ஜனவரி 14 முதல் 1984, அக்டோபர் 31 ம் தேதிவரையிலும் பிரதமராக 5,829 நாட்கள் பிரதமாராக இருந்தார்.

காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2004 மே 22 முதல் 2014, மே 26 வரை 10 ஆண்டுகள் அதாவது 3,656 நாட்கள் பிரதமராக இருந்தார். இவர்களுக்கு அடுத்ததாக அதிக காலம் பிரதமர் பதவியை வகித்து வருகிறார் நரேந்திர மோடி. இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் பிரதமர்களிலேயே அதிக நாட்கள் இந்த பதவியில் இருந்தவர் என்ற புதிய சாதனையையும் பிரதமர் மோடி படைத்துள்ளார். மோடிக்கு முன்னதாக காங்கிரஸ் சாராத கட்சியின் பிரதமராக அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய் (மொத்தம் 2,268 நாட்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...