இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை - மீட்பு விகிதமும் உயர்வு


இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை - மீட்பு விகிதமும் உயர்வு
x
தினத்தந்தி 14 Aug 2020 10:45 PM GMT (Updated: 14 Aug 2020 9:34 PM GMT)

இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் மீட்பு விகிதமும் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சாதனை அளவாக 8 லட்சத்து 48 ஆயிரத்து 728 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு நாளில் 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற இலக்கு நோக்கி நாடு பயணிக்கிறது. இதுவரையில் 2 கோடியே 76 லட்சத்து 94 ஆயிரத்து 416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பரிசோதனை விகிதம் என்பது 10 லட்சம் பேருக்கு 925 மாதிரிகள் என்ற அளவில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து நேற்று குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 573 ஆகும். இதுவரையில் கொரோனாவை தோற்கடித்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 ஆக உள்ளது.

மீட்பு விகிதம் 71.17 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் பலியானோர் விகிதம் 1.95 சதவீதமாக குறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story