சுதந்திர தின விழா: லடாக்கில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் கொண்டாட்டம்


சுதந்திர தின விழா: லடாக்கில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2020 4:22 AM GMT (Updated: 15 Aug 2020 4:22 AM GMT)

லடாக்கில் தரை மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.


லடாக்கில் இந்திய - திபெத் எல்லை காவல் படையினர், 74 -சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர். அப்போது கையில் கொடி பிடித்து ஒரு ராணுவ வீரர் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னே பாரத் மாதா கி ஜே என்ற குரல் எழுப்பிச் சென்றனர்.  

தரை மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் இந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல்,  அமிர்தசரஸில் உள்ள அட்டாரி - வாகா எல்லையிலும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் எஸ் எஸ் தேஸ்வேல் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்தார்.

Next Story