தேசிய செய்திகள்

14,000 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றிய இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் + "||" + Indo-Tibetan border guards hoist the national flag at an altitude of 14,000 feet

14,000 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றிய இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்

14,000 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றிய இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் தேசியக் கொடி ஏற்றினர்.
திபெத்,

இந்தியாவின் 74வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநில அரசுகள், பொதுமக்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பல தரப்பினரும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் இந்திய-திபெத்திய எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் எல்லைக் காவல் படையினரால் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள பாங்காங்சோ என்ற ஏறியின் கரையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...