50 கோடி பயனாளர்களை கொண்ட உலகின் பெரிய இணையதள பொருளாதார நாடு இந்தியா; மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதம்


50 கோடி பயனாளர்களை கொண்ட உலகின் பெரிய இணையதள பொருளாதார நாடு இந்தியா; மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதம்
x
தினத்தந்தி 15 Aug 2020 4:32 PM GMT (Updated: 15 Aug 2020 4:32 PM GMT)

50 கோடி பயனாளர்களுடன் உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான இணையதள பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் வர்த்தக நோக்கிலான இணையதள சேவை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கி வைக்கப்பட்டது என மத்திய கல்வி துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது செய்தியில், 50 கோடி பயனாளர்களுடன் உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான இணையதள பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணையதள சேவை கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் கல்வி பற்றிய அறிவை தேசமக்கள் வளர்த்து கொள்ளுதல் ஆகிய உள்ளீட்டுபொருளுடன் நமது மதிப்பிற்குரிய பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆனது இந்தியாவின் வளர்ச்சி நிலையை வடிவமைத்து வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடியால் சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் முதல் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.  இதனால் அந்த தீவில் அதிவேக இணையதள வசதி கிடைக்கப்பெற்று அதனால், இணையதள கல்வி, சுற்றுலா மற்றும் வர்த்தகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்து உள்ளார்.

Next Story