ஜம்மு காஷ்மீர்: 5 மாதங்களுக்குப் பிறகு வைஷ்ணவிதேவி கோவில் திறப்பு


ஜம்மு காஷ்மீர்: 5 மாதங்களுக்குப் பிறகு வைஷ்ணவிதேவி கோவில் திறப்பு
x
தினத்தந்தி 16 Aug 2020 8:32 AM GMT (Updated: 16 Aug 2020 8:32 AM GMT)

5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் திறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

கொரோனா  பரவல் அச்சுறுத்தல்  காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோயிலுக்கான யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் திரிகூட மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மாா்ச் 18-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது

.இதுகுறித்து அந்தக் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் குமாா் கூறுகையில்,:வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரைக்கு  இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. முதல் வாரத்தில் ஒவ்வாரு நாளும் அதிகபட்சம் 2,000 போ் மட்டுமே யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா். அதில், வெளி மாநிலத்தைச் சோ்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். ஒரு வாரத்துக்குப் பின்னா் நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். 

Next Story