கொரோனா குறித்து எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன: ராகுல் காந்தி விமர்சனம்


கொரோனா குறித்து எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன: ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 20 Aug 2020 1:21 PM GMT (Updated: 20 Aug 2020 1:21 PM GMT)

கொரோனா குறித்து நான் முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு, வேலை வாய்ப்பு இழப்பு  ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி “ கொரோனா குறித்து எச்சரித்த போது ஊடகங்கள் தம்மை கேலி செய்ததாக தெரிவித்துள்ளார்.  பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:-  இந்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாது. இது வெளிப்படையானது.  கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சூழல் நமது நாட்டில் ஏற்படவில்லை.

கொரோனா பெருந்தொற்றால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட போகிறது என நான் எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன.  
இன்று சொல்கிறேன், நம் அரசால் வேலை கொடுக்க முடியாது. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆறேழு மாதங்கள் காத்திருங்கள். இந்த தடைக்காலத்திற்கு பிறகு சிறிய மற்றும் நடுத்தர ரக தொழில்கள் முடங்கிப் போக  உள்ளன. ஒவ்வொரு நிறுவனமாக சரிவை சந்தித்து வருவதை உங்களால் காண முடியும்” என்றார். 


Next Story