கர்நாடகாவில் பணி நெருக்கடியால் சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை; ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கர்நாடகாவில் பணி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் நாகேந்திரா. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார்.
அதனுடன், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கொண்டு பணி புரிந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவரவில்லை.
எனினும், சுகாதார இலக்கை முழுமையாக எட்டவில்லை என நெருக்கடி கொடுத்ததாக அவர் புகார் அளித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story