தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தீவிரம் + "||" + Maharashtra: Neeraj and Sidharth Pithani along with the CBI team outside the residence of #SushantSinghRajput in Mumbai.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தீவிரம்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தீவிரம்
தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் வந்து உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். அவர்கள் 10 நாட்கள் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை பந்த்ராவில் உள்ள காவல் நிலையம் வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றதாக தெரிகிறது. தொடர்ந்து அங்கிருந்து சுஷாந்த் சிங் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்தனர். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சூழல் ஆகியவை பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத்தெரிகிறது.  மும்பை போலீசாரும் சுஷாந்த் சிங் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக காங்.தலைவருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை- சித்தராமையா கடும் கண்டனம்
கர்நாடக காங்.தலைவர் டிகே சிவக்குமாருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
2. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 10½ மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
4. விஷம் வைத்து எனது மகனை கொன்றது ரியா சக்ரபோர்த்திதான் - சுஷாந்த் சிங் தந்தை
விஷம் வைத்து எனது மகனை கொன்றது ரியா சக்ரபோர்த்திதான், அவரை கைது செய்ய வேண்டும் என சுஷாந்த் சிங் தந்தை கூறி உள்ளார்.
5. சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை
சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.