தேசிய செய்திகள்

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ் + "||" + Reports of Sonia Gandhi resigning from the post of Congress interim president are false: Randeep Singh Surjewala, Congress spokesperson to ANI

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்

சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்
சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து  கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை   இடைக்கால தலைவராக சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது.  

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “ சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பெண் மந்திரி பற்றி சர்ச்சை கருத்து: கமல்நாத் மீது காங். நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
பா.ஜனதா பெண் மந்திரி மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கமல்நாத் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
3. பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
பா.ஜனதா அரசு தனது ஜனநாயக விரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது என்று காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என்று அக்கட்சியில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
5. திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லா குஷ்புவின் 10 ஆண்டுகால அரசியல் பயணம்
திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... என குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.