சீன எல்லையில் படைகளை குறைக்க முடியாது: இந்தியா திட்டவட்டம்


சீன எல்லையில் படைகளை  குறைக்க முடியாது:  இந்தியா திட்டவட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2020 4:04 PM GMT (Updated: 23 Aug 2020 4:04 PM GMT)

சீன எல்லையில் படைகளை குறைக்க முடியாது என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வீரர்களின் எண்ணிக்கை குறைக்க முடியாது என்று  இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்  பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன,

இந்நிலையில் இந்தியா மீதான கண்காணிப்பை சீனா அதிகப்படுத்தி உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. சீனா தனது எல்லைப்பகுதியில் 180 டிகிரி வரை சுழலும் இரண்டு அதிசக்தி வாய்ந்த கேமராக்களை நிறுவி உள்ளதாகவும்  சோலாா் பேனல், காற்றாலை ஒன்றையும் கட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதன் காரணமாக இந்திய படைகள் எல்லைப்பகுதியில் இருந்து வாபஸ் பெற போவதில்லை என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.


Next Story