கொரோனா ஊரடங்கு காலத்தில் 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து: இந்தியன் ரெயில்வே


கொரோனா ஊரடங்கு காலத்தில் 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து: இந்தியன் ரெயில்வே
x
தினத்தந்தி 23 Aug 2020 4:05 PM GMT (Updated: 23 Aug 2020 4:05 PM GMT)

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1.78 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில மாநிலங்கள் பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் மெட்ரோ ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்களுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இதனால் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அதற்கான பணம் திருப்பி வழங்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ மூலம் டிக்கெட் குறித்த தகவல்கள் கேட்டிருந்தார்.

அதற்கு இந்திய ரெயில்வே மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 2,727 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் முதன்முறையாக வருமானத்தை விட டிக்கெட் ரத்து செய்யப்பட்டு அற்காக திரும்ப வழங்கப்பட்ட தொகை அதிகம் என இந்தியன் ரெயில்வே தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 11-ந்தேதி வரை 3660.08 கோடி ரூபாய் திரும்ப வழங்கியிருந்தது. அதேவேளையில் 17,309.1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தது.

ஏப்ரல் மாதம் வருமானம் 531.12 கோடி ரூபாய், மே மாதம் 145.24 கோடி ரூபாய், ஜூன் மாதம் 390.6 கோடி ரூபாய் நெகட்டிவ் ஆக வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் 4,345 ரூபாயும், மே மாதம் 4,463 ரூபாயும், ஜூன் மாதம் 4,589 ரூபாயும் வருமான ஈட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Next Story