வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிப்பு


வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2020 10:35 AM GMT (Updated: 24 Aug 2020 10:35 AM GMT)

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Next Story