தேசிய செய்திகள்

ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தல் + "||" + Ahmed Patel criticises dissenters, says Rahul Gandhi should be Cong president

ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தல்

ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தல்
ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது.

இதில் பேசிய சோனியா காந்தி, இடைக்காலத் தலைவர் பதவியை தொடர தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே மறுத்து கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல், அதிருப்தியாளர்களை மறைமுகமாக சாடினார். மேலும், குலாம் நபி  ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா ஆகியோரை பெயர் குறிப்பிட்டு பேசிய அகமது படேல், முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இதுபோன்ற கடிதங்களை எழுதியிருக்கக் கூடாது எனவும் ராகுல் காந்தி எந்த தாமதமும் இன்றி உடனடியாக கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
2. பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
பா.ஜனதா அரசு தனது ஜனநாயக விரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது என்று காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
3. புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
4. பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.
5. தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம்
ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது.