டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்


டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 26 Aug 2020 10:37 AM GMT (Updated: 26 Aug 2020 10:37 AM GMT)

டெல்லியில் அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குஜராத், அசாம்,டெல்லி போன்ற மாநிலங்களில் பெய்து வருகிறது.  இந்நிலையில் டெல்லியில் அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில்அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக டெல்லியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 வரை டெல்லி உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பருவமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story