மத்திய அரசின் முக்கிய சட்ட மசோதாக்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள காங்கிரசில் ஐவர் குழு அமைப்பு


மத்திய அரசின் முக்கிய சட்ட மசோதாக்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள காங்கிரசில் ஐவர் குழு அமைப்பு
x
தினத்தந்தி 26 Aug 2020 4:41 PM GMT (Updated: 26 Aug 2020 4:41 PM GMT)

மத்திய அரசின் முக்கிய அவசர சட்டம் பற்றிய ஆலோசனைக்காக காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு அறிவிக்க கூடிய முக்கிய அவசர சட்டங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக 5 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு அறிவிக்கும் முக்கிய அவசர சட்டங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும் மற்றும் அவற்றின்மீது காங்கிரசின் நிலைப்பாடு பற்றி முறைப்படுத்தவும் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி தலைவர் அமைத்துள்ளார்.

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் ரமேஷ் செயல்படுவார்.  இந்த குழுவில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், திக் விஜய சிங், ஜெய்ராம் ரமேஷ், டாக்டர். அமர் சிங் மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story